நிதி விடுவிப்பில் தாமதம் ஏன்? அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 13- தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்க்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்’ கீழ், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் பெறப்பட்டதாகப் பகிரப்பட்டு வரும் தரவுகளின்படி, நடப்புக் கல்வியாண்டில் வெளி நாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர் களில், இதுவரை 65 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

உரிய ஆவணங்களைச் சமர்ப் பித்தப் பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக (ஆர்.டி.அய்.) மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.

மீதமுள்ள அனைத்து மாண வர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?  இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி தாழ்த்தப்பட்ட, பழங் குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?  ‘திராவிட மாடல்’ அரசால் சிறப்பாகச் செயல் படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அரசின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் இதுவரை வெளி யிடப்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *