சென்னை, பிப். 20- அடையாறில் நடைபெற்ற மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் திமுக மகளிர் அணி சார்பில் மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா நேற்று (19.2.2023) நடை பெற்றது. இந்த விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க.வின் பெண்சிங்கமாக வாழ்ந்தவர் சத்தியவாணி முத்து. அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர். அகில இந்திய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணைய தலைவராக சத்தியவாணி முத்துவை, முத்தமிழறிஞர் கலைஞர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், அப்போது ஆட்சி கலைக்கப்பட்டதால் அது நிறைவேற்ற வில்லை. போராட்ட குணம், தியாக உணர்வு, அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இறுதி மூச்சுவரை இருந்த காரணத் தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.