அதிர்ச்சி தரும் தகவல்! இந்தியாவில் 3.86 கோடி மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 12- இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ள 8 கோடியே 98 லட்சம் பேரில், 3 கோடியே 86 லட்சம் பேருக்கு தங்க ளுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் பாதிப்பு அதி கரித்து வரும் நிலையில், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது தொடர்பாக பன்னாட்டு நீரிழிவு கூட்ட மைப்பு புதிய ஆய்வை நடத்தியது.

இந்தியாவில் 25 முதல் 64 வயதுக்கு உட்பட்ட 502 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீரிழிவு நோய் குறித்து மக்களிடம் நிலவும் பல்வேறு தவறான புரிதல்களும், பரிசோதனை செய்து கொள்வதில் உள்ள தயக்கமும் தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் 8 கோடியே 98 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக் கப்பட்டு உள்ளனர். இவர்களில் 43 சதவீதம் பேருக்கு தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படவில்லை. அதாவது சுமார் 3 கோடியே 86 லட்சம் பேர் நோய் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

நீரிழிவு நோய் இருப்பது தெரியாமல் இருப்பதால், உரிய நேரத்தில் சிகிச்சையை தொடங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோயால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் தங்களுக்கு இருப்பதை 84 சதவீதம் பேர் உணர்ந்து உள்ளனர். ஆனால், நோய் குறித்து பலரிடம் தவறான கருத்துகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2ஆம் வகை நீரிழிவு நோய் வயதானவர் களுக்கு மட்டுமே ஏற்படும் என்று 14 சதவீதம் பேர் தவறாக நம்புகின்றனர்.

மேலும், 75 சதவீதம் பேர் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை அறிய, அதற்கான அறிகுறிகள் வெளிப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். ஆனால், நீரிழிவு நோய் உள்ள பலருக்கு ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அறிந்து கொள்வதற்காக பரிசோதனை செய்து கொள்ள மாட்டோம் என்று ஆய்வில் பங் கேற்றவர்களில் 48 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்களில் குறைந்தது 80 சதவீதம் பேருக்கு நோய் இருப்பது 2030ஆம் ஆண்டுக்குள் கண்டறியப்பட்டிருக்க வேண்டும் என்று பன்னாட்டு நீரிழிவு கூட்டமைப்பு இலக்கு நிர்ண யித்துள்ளது.

இந்த ஆய்வு இந்தியா மட்டுமின்றி பிரேசில், சீனா. சவுதி அரேபியா, அய்க்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நடத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *