அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொரு ளாதார ஆனர்ஸ் வகுப்பில் என்னுடன் படித்த நண்பரும், பிறகு பொருளாதாரப் பேராசிரியராகி மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியின் துணை முதல்வராக இருந்தவருமான திரு. ஆர். வரதராஜன் அவர்கள் தனது (94ஆம் வயதில்) உடல் நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தி எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர்
திரு. ச.பாஸ்கர் எம்.ஏ. அவர்கள் அவர் பற்றி எழுதிய நூலை எனக்கு அனுப்பி எமக்கிடையிலான தொடர்பைப் புதுப்பித்தார்.

அவரைப் பார்க்க நானும், என்னைப் பார்க்க அவரும் ஆவலாக இருந்தும் – பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது.
இன்று (10.11.2026) காலை அவர் மறைந்தார் என்ற செய்தி வந்ததும் மிகவும் வேதனையடைந்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி கனத்த நெஞ்சத் தோடு திரும்பினோம்.
இதில் ஒரு வேடிக்கை – அவர் ஸநாதானி சங்கராச்சாரியாரின் பக்தர். கொள்கையில் நாங்கள் நேர் எதிரானவர்கள். அன்பில், நட்பில் இணைந்தவர்கள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
10.11.2026
சென்னை
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆர். வரதராஜன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திய போது தாம்பரம் ப.முத்தையன், அ.கபிலன், கு.வைத்தியலிங்கம், குரோம்பேட்டை அ.ராஜேந்திரன், மாடம்பாக்கம் அ.கருப்பையா, தாம்பரம் மு.மதியழகன், தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
