திராவிடர் கழகத்தின் பொருளாளராகவும், அதற்குமுன் பல்வேறு கழகப் பொறுப்புகளிலும் இருந்த தொண்டறச் செம்மல், மாணவப் பருவந்தொட்டே தந்தை பெரியார் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கல்லக்குறிச்சி வழக்குரைஞர் கோ. சாமிதுரை நினைவு நாள் இன்று!
என்னுடன் சதையும் நகமுமாக இருந்தவர் அவர். வருமானம் நிரம்ப ஈட்டிய நிலையிலும், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தொழிலை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்னைக்கே வந்து குடியேறி என்னுடன் தோளோடு தோள் நின்று கழகப் பணிபுரிந்த உயிர்த் தோழர்.
அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும், அவரது அருமைச் செல்வர்களான டாக்டர் குமார் அவர்களும், வழக்குரைஞர் பாஸ்கர் அவர்களும் இயக்கப் பணிகளை சற்றும் தொய்வின்றித் தொடருவது நமக்கெல்லாம் நல்ல ஆறுதலும், மகிழ்ச்சியுமாகும்!
நம் நெஞ்சத்தில் நிறைந்த என் உடன் பிறவா தோழர் ஜி.எஸ். அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றேன். குடும்பத்துப் பிள்ளைகள், பெரியவர்கள் அவர் வழி நின்று பெரியார் கொள்கையாளர்களாகத் திகழ்வார்களாக!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.11.2026
