திராவிடர் கழக மேனாள் பொருளாளர் மானமிகு கோ. சாமிதுரைக்கு நமது வீர வணக்கம்!

- Advertisement -

திராவிடர் கழகத்தின் பொருளாளராகவும்,  அதற்குமுன் பல்வேறு கழகப் பொறுப்புகளிலும் இருந்த தொண்டறச் செம்மல், மாணவப் பருவந்தொட்டே தந்தை பெரியார் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கல்லக்குறிச்சி வழக்குரைஞர் கோ. சாமிதுரை நினைவு நாள் இன்று!

என்னுடன் சதையும் நகமுமாக இருந்தவர் அவர். வருமானம் நிரம்ப ஈட்டிய நிலையிலும், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தொழிலை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்னைக்கே வந்து குடியேறி என்னுடன் தோளோடு தோள் நின்று கழகப் பணிபுரிந்த உயிர்த் தோழர்.

அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும், அவரது அருமைச் செல்வர்களான டாக்டர் குமார் அவர்களும், வழக்குரைஞர் பாஸ்கர் அவர்களும் இயக்கப் பணிகளை சற்றும் தொய்வின்றித் தொடருவது நமக்கெல்லாம் நல்ல ஆறுதலும், மகிழ்ச்சியுமாகும்!

நம் நெஞ்சத்தில் நிறைந்த என் உடன் பிறவா தோழர் ஜி.எஸ். அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றேன். குடும்பத்துப் பிள்ளைகள், பெரியவர்கள் அவர் வழி நின்று பெரியார் கொள்கையாளர்களாகத் திகழ்வார்களாக!

 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

9.11.2026        

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *