அய்ந்து மாநிலத் தேர்தல்கள்: தேர்தல் ஆணையர்கள் எங்கே?

- Advertisement -

புதுடில்லி, நவ.6 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய அய்ந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக இன்னும் இரண்டு மாத காலமே உள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தல்பணிகளில் ஈடுபடாமல் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட மூன்று ஆணையர்களும் தலைமறைவாக இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொது வாக, ஒரு மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன், தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட மூன்று ஆணையர்களும் தேர்தல் நடைபெறும் மாநிலத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, உள்ளூர் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது வழக்கம். அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
ஆனால், வரவிருக்கும் அய்ந்து மாநி லச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆய்வில் துணைத் தேர்தல் ஆணையர்கள் போன்ற கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டு,கூட்டங்களை நடத்தி வரு கின்றனர். ஞானேஷ் குமார் உட்பட தேர்தல் ஆணையர்கள் இதுவரை தலைகாட்ட வில்லை.
ஞானேஷ் குமார் சுற்றுலா
இதுதொடர்பாகத் தெளிவான காரணம் தெரியவில்லை. ஆனால் தேர்தல் ஆணை யர்கள் சுக்பீர் சிங்சா ந்து, விவேக் ஜோஷி ஆகிய இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் குறித்து எழுதிய கடிதங்கள் பற்றி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டது.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணை யம் தாக்கல் செய்த கூட்டுப் பிர மாணப் பத்திரத்தில் ‘படிவம் – 7’ (வாக்காளர்களை நீக்கும் படிவம்) உள்ளிட்ட பல்வேறு பொய்களை நீதிபதிகள் அம்பலப்படுத்தியது உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதஇறுதியில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பின், மூன்று ஆணை யர்களும் ஒன்றாக இருக்கும் காட்சிகளோ அல்லது அவர்கள் நடத்திய கூட்டங்கள் பற்றிய அறிவிப்புகளோ எதுவும் வரவில்லை.
பலத்த பாதுகாப்புப் படையுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தனது தனிப்பட்ட கோயில் வழிபாடுகள் உள்ளிட்ட சுற்றுலா நிகழ்வுகள் செய்தி நிறுவனங்களால் நிழற்படங்களாக வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ‘விளம்பரத் தூதரகவே’ வலம் வந்தார். ஒவ்வொருவாரமும் செய்தித் தொடர்பாளர்களின் மின்னஞ்சல்களிலும், தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பக்கங்களிலும் ஞானேஷ் குமாரின் 10 நிழற்படங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. 5 மாநிலத் தேர்தல் பணி தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை.
மோடி அரசின் கட்டுப்பாட்டில்…
ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சி னைகளால் தேர்தல் ஆணையர்கள் அய்ந்து மாநிலத்தேர்தல் பணிகளில் பங்கேற்க வில்லையா; எஸ்அய்ஆர் மூலம் நடைபெறும் வாக்குத் திருட்டு தொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் 9.10.2026 அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.
இதனை எதிர்கொள்ள மூன்று ஆணை யர்களும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஒன்றிய அரசுமுயன்றதாகவும், ஆனால் இரு ஆணையர்கள் அதற்கு மறுத்து விட்டதாகவும், இதன் காரணமாகவே இணக்க மான சூழல் இல்லாததால் அய்ந்து மாநிலத் தேர்தல் பணிகள் ஆணையாளர்கள் இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளி யாகியுள்ளன.
இதனைப் பத்திரிகையாளர் ரவீஷ் குமாரும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எதிர்க்கட்சித் தலைவர்கள் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து எஸ்அய்ஆர் தொடர்பாக மனு அளித்தனர். அப்போது எதிர்க்கட்சியின் பிரச்சாரத்தை முறியடிக்க மூன்று தேர்தல் ஆணையர்களும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று ஒரு ஒன்றியஅமைச்சர் தனது அரசாங்கத்திற்கும் பாஜகவிற்கும் உறுதியளித்திருந்தார். ஆனால், இதனைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மட்டுமே ஏற்றுக்கொண்டார். மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறினார்.
இதன்மூலம் எஸ்அய்ஆர் முறைகேட்டில் தேர்தல் நம்பகத்தன்மை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மோடி அரசு மூன்று தேர்தல் ஆணையர்களையும் ஒதுங்கி யிருக்கச் சொன்னதா; எஸ்அய்ஆர் முறைகேடுகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையர்களை ஒதுக்கிவிட்டு, மோடி அரசு நேரடியாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறதா; மூத்தஆணையர்கள் இல்லாத நிலையில் ஆணையத்தின் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற கேள்விகள்
எழுந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *