கோவையில் ஜாதி வெறியால் மாண்ட மாணவர் அகிலன் இல்லத்திற்குச் சென்று படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை

- Advertisement -

கோயம்புத்தூர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்து வந்த 11 ஆம் வகுப்பு மாணவர் அகிலன் என்பவர், ஜாதியக் கொடுமையினால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அம்மாணவர் மாட்டுக்கறி சாப்பிடுவதை அறிந்த சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரைக் கேலி செய்ததோடு, அம்மாணவரை தனிமைப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பீளமேடு பகுதியில் உள்ள அகிலன் இல்லத்திற்கு நேற்று (05.11.2026) காலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையார் மற்றும் கழகத் தோழர்கள் நேரில் சென்று அகிலன் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தியதோடு, அவரின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினர். உடன்: நாகை திருவள்ளுவன், மருத்துவர் இரா.கவுதமன், தஞ்சை இரா. ஜெயக்குமார், சந்திரசேகரன், வழக்குரைஞர் சென்னியப்பன், நாத்திக பொன்முடி உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *