கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசுப் பணி தமிழ்நாடு அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 5- கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில் விளக்க மனு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூரில் கடந்தாண்டு செப். 28இல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த நிகழ்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு தவெக அரசில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இருப்பினும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு அரசுப் பணி வழங்கும் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் நேற்று (4.11.2026) இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மன்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் விளக்க மனு அளிக்க தமிழ்நாடு அரசு சார்பில் 2 வார அவகாசம் கோரப்பட்டது.

இதனையடுத்து, விளக்க மனு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு 4 வார அவகாசம் அளித்து, வழக்கை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *