திராவிட இயக்கம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? தந்தை பெரியாருடைய கொள்கைகள் என்ன?
அவருடைய லட்சியங்கள் என்ன? என்பதை அறிந்துகொள்ள,
இளைஞர்கள், மாணவர்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வந்து பார்த்து, படித்து அவர்களுடைய அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்!
கோவை, நவ.5 இன்றைக்குத் தமிழ்நாடு போய்க் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், திராவிட இயக்கம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? தந்தை பெரியாருடைய கொள்கைகள் என்ன? அவருடைய லட்சியங்கள் என்ன? என்பதை அறிந்து கொள்ள, இளைஞர்கள், மாணவர்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வந்து, பார்த்து, அவர்களுடைய அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற அன்பான வேண்டுகோளை இந்த நேரத்தில் நான் எடுத்து வைக்க விரும்புகின்றேன் என்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நேற்று (4.11.2026) கோவையில், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில் வருமாறு:
செய்தியாளர்: பெரியார் அறிவுலகத்தினுள் சென்று பார்த்தீர்களே, எப்படி உணர்கிறீர்கள்?
தளபதி மு.க.ஸ்டாலின்: ‘திராவிட மாடல்’ அரசினு டைய கனவுத் திட்டமான தந்தை பெரியார் பெயரில் அமைந்திருக்கக் கூடிய இந்த அறிவுலகத்தைப் பார்க்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பு, ஏற்கெனவே இங்கே வந்து நான் பார்த்திருந்தாலும், பெரியார் அறி வுலகம் திறக்கப்பட்டதற்குப் பிறகு, இந்தத் திட்டம் முழுமை யடைந்ததற்குப் பிறகு, இன்று (4.11.2026) நானும், அய்யா ஆசிரியர் அவர்களும் இதைப் பார்க்கக் கூடிய அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இன்னொரு முறை இங்கே வந்து…
அதிகம் பிடித்திருந்த காரணத்தால், நாங்கள் பொறுமையாக அனைத்தையும் பார்க்க முடியாத சூழ்நிலை. ஆகவே, இன்னொரு முறை இங்கே வந்து, இதை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை என்னுடைய உள்ளத்தில் தோன்றியிருக்கிறது.
ஆகவே, இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்குத் தமிழ்நாடு போய்க் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், திராவிட இயக்கம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? தந்தை பெரியாருடைய கொள்கைகள் என்ன? அவருடைய லட்சியங்கள் என்ன? என்பதை அறிந்துகொள்ள, இளைஞர்கள், மாண வர்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வந்து, பார்த்து, படித்து அவர்களுடைய அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற அன்பான வேண்டுகோளை இந்த நேரத்தில் நான் எடுத்து வைக்க விரும்புகின்றேன்.
– இவ்வாறு திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
