குரூப் 2, 2ஏ தேர்வு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

 சென்னை, ஆக.21 குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வெழுதியவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப் பட்டியல்கள் ஏற்ெகனவே வெளியிடப் பட்ட நிலையில், அவர்களுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு எழுதியவர்கள், தங்கள் மூலச்சான்றிதழ்களைச் சரிபார்க்க, சென்னை டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களை, ‘www.tnpsc.gov.in’ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஒடுக்கப்பட்டோரின் வளர்ச்சி

ஆதி திராவிட,  பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு – சென்சார் சோதனைப் பயிற்சி

தாட்கோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை, ஆக.21 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின பொறியியல் பட்டதாரிகளுக்கும், டிப்ளமா முடித்தோருக்கும் ட்ரோன் தயாரிப்பு, எம்பெட்டெட் – சென்சார் சோதனை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு அரசின் தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மேலாண் இயக்குநர் கே.எஸ். கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாட்கோ நிறுவனம், சென்னை யில் உள்ள முன்னணி தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு. கூட்ட மைப்பு, சோதனைமற்றும்பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெட்டெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் ஆகிய பயிற்சிகளை அளிக்க உள்ளது. ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித் திருக்க வேண்டும்.

எம்பெட்டெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டட் சர்க்யூட் போர்டு வடி வமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, பொறியியலில் ஏதேனும் ஒருபாடப் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட பயிற்சிக் கான அனைத்துசெலவினங்களும் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்பும் தகுதியுள்ள ஆதி திரா விடர்-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தின் (www.tahdco. com) மூலம் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *