கனடாவிலிருந்து 9 மாதங்களில் 4,526 இந்தியர்கள் வெளியேற்றம்!

1 Min Read
- Advertisement -

டொரண்டோ, நவ. 4- கனடாவி லிருந்து இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4,526 என தரவுகள் தெரிவிக்கின்றன. இது அந்நாட்டின் மொத்த வெளியேற்ற நடவடிக்கைகளில் 27 சதவீதத்திற்கும் அதிகமாகும். அதேபோல, ஒரே ஆண்டில் கனடாவிலிருந்து வெளி யேற்றப்பட்ட இந்தியர்களில் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான தரவுகள் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் கீழ் வெளியாகியுள்ளது.

கனடாவில் 2020 ஆம் ஆண்டிற்குப் பின் இனவாரியான வெளியேற்றப் பட்டியலில் இந் தியர்களே மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 2020இல் கனடா விலிருந்து வெளியேற்றப்பட்ட வெளி நாட்டவர்களின் எண்ணிக்கை 12,858. அதில், 1,424 பேர் இந்தியர்கள். அதா வது 11 சதவீத இந்தியர்கள் ஆவார்.

இடைப்பட்ட ஆண்டுகளில் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் அதிகளவு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தாண்டு இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.கனடாவிற்குள் நுழையத் தகுதியற்ற வர்களாக கடந்த ஆண்டு 3,779 இந்தியர்கள் கருதப்பட்டனர். அதே ஆண்டில் மொத்தமாக 23,160 பேர் வெளியேற்றப்பட்டதில் 4,837 பேர் மெக்சிகோ நாட்டைச் சார்ந்தவர்கள்.

வெளியாகும் தரவுகளின் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகும் குழுவாக உள்ளனர் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக, நிலுவையில் உள்ள 52,457 வெளியேற்ற வழக்குகளில் 11,393 வழக்குகள் இந்தியக் குடிமக்களுக்கு எதிரானவை.

கனடாவில் வெளியேற்ற உத்தரவு, விலக்கு உத்தரவு,  புறப்பாட்டு உத்தரவு என வெளியேற்றம் தொடர்பான மூன்று வகையான உத்தரவுகள் இருப்பதாக கனடா எல்லைச் சேவைகள் முகமை குறிப்பிட்டுள்ளது.  கனடாவிற்குள் நுழையவோ அல்லது அங்கு தங்கவோ உரிமையற்ற நபர்களை வெளியேற்றுவது, நாட்டின் குடிவரவு அமைப்பின் நேர்மையைப் பேணுவதற்கும், கனடாவிற்குச் சட்டப்பூர்வமாக வருகை தருபவர் களுக்கான நீதியை உறுதி செய்வ தற்கும் அவசியமானது என்று கனடா எல்லைச் சேவைகள் முகமை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *