காரைக்குடி, நவ.4- காரைக்குடி அருகே இளங்குடி கிராமத்தில் பழம்பெரும் திராவிடர் கழகத் தொண்டராகவும், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் தலைமையை ஏற்று இயக்கப் பணிகளில் ஈடுபட்டவரும், மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் என்றைக்கும் தவறாமல் கழகப் பணியில் செய லாற்றிய ம.காந்தி (வயது 69) நேற்று (3.11.2026) மாலை உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் மறை வுற்றார்.
காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர்.சாமியுடன் நெருங்கிப் பழகி கழக நிகழ்ச்சிகளில் தவறாமல் கருஞ்சட்டையுடன் வருகை தருபவர்.
தனது மூன்று சக்கர வாகனத்தில் கழகக் கொடி கட்டிக்கொண்டு மாவட்டத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பதோடு கழகம் அறிவித்தப் போராட் டங்களில் தவறாமல் பங்கேற்று கைதாகியும் இருக்கின்றார். அவரது இறுதி நிகழ்வு இன்று (4.11.2026) காலை 9.00 மணிக்கு இளங்குடியில் நடைபெற்றது.
அவரது இறுதி விருப் பத்திற்கு ஏற்ப அவரது உடல் மீது கழகக்கொடி போர்த்தி மாலை அணிவித்து மாவட்ட தி.க. காப்பாளர் சாமி.திராவிடமணி, கல்லல் ஒன்றிய கழகத் தலைவர் கொரட்டி வீ.பாலு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் இள.நதியா ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
