தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய கழக மேனாள் செயலாளர் மல்லுப்பட்டி என்.பற்குணன் 23.07.2026- இரவு 11.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கிருட்டினகிரி பகுதி தருமபுரி மேற்கு மாவட்டமாக இருந்தபோது காரிமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளராக இருந்தவர் என்.பற்குணன்.
மறைவு செய்தி அறிந்து 24.07.2026 – அன்று கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மேனாள் மாவட்டத் தலைவர் பையூர் பெ.மதிமணியன், காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன் உள்பட கழகத்தோழர்கள் பற்குணன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
