திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

1 Min Read
- Advertisement -

கோவைக்கு வருகை தந்த தி.மு.க. தலைவரும், மேனாள் முதலமைச்சரும், திராவிட நாயகருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில், கழகத் தோழர்கள் மகிழ்ச்சி பொங்க, உற்சாகத்துடன் வரவேற்றனர் (கோவை விமான நிலையம், 4.11.2026).

திராவிடர் கழகம்

*பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட பின்னர், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. * நான்காம் தளத்தில் அமைந்திருந்த தமிழ்நூல்கள் பிரிவில் மாணவர்களுடன் தலைவர்கள் இருவரும் கலந்துரையாடினர். *பெரியார் அறிவு லகத்தைப் பார்வையிட்ட பொதுமக்கள்.

திராவிடர் கழகம்

கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மேனாள் அமைச்சரும், மண்டல தி.மு.க. பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., கோவை மாநகர மாவட்டத் தி.மு.க. செயலாளர் துரை. செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா’ முகப்பினைப் பார்வையிட்டத் தமிழர் தலைவருடன் கழகத் தோழர்கள்

திராவிடர் கழகம்

கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ரயில் நிலையத்தில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கோவை மாவட்ட கழகத் தலைவர் ம. சந்திரசேகர் மற்றும் கழகத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *