மேட்டூர், நவ. 4- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நவ. 3 மாலை நிலவரப்படி வினாடிக்கு 3,777 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (4.11.2026) காலை உயர்ந்து வினாடிக்கு 4,614 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத் தேவைகளுக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.06 அடியிலிருந்து 56.38 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 22.06 டி.எம்.சி ஆக பதிவாகியுள்ளது.
