திருவள்ளுவருக்கு மத அடையாளமா?

3 Min Read
- Advertisement -

சென்னை சின்ன நீலாங்கரைப் பகுதியில் – சிங்காரவேலனார் வலைப் பின்னும் கூடத்தில் திருவள்ளுவரின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. வரவேற்கத்தக்கதுதான்!

ஆனால் அதில் செய்துள்ள அடிப்படையான தவறுதான் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் ஓவியத்தில் நெற்றியில் பட்டை – கழுத்தில் ருத்ராட்சை கொட்டை மாலை  அணிந்ததுபோல தீட்டப்பட்டு இருப்பது – திருவள்ளுவரை ஓர் இந்து மதத் துறவி போல சித்தரித்திருப்பது எந்த வகையில் சரியானது?

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் எந்த ஒரு குறளிலாவது கடவுள் என்ற சொல்லோ, மதம், சமயம் என்றோ இருப்பதாக எடுத்துக்காட்ட முடியுமா?

அந்தக்கூடம்  தனியாருக்குச் சொந்தமானதல்ல – அரசுக்கு உரியது. அரசுக்குச் சொந்தமான இடத்தில், மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சிந்தனையாளரை  இந்து மதக் குடுவைக்குள் அடக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு, அந்த மத அடையாளங்கள் அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கதாகும்.

அதே நேரத்தில், திருவள்ளுவரை இந்து மத அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது முக்கியமான கேள்வியாகும்.

தமிழ்நாட்டு ஆளுநராக இருந்த ஆர்.என். இரவி ஆளுநர் மாளிகையில் காவி உடை, நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சை மாலை தோற்றத்துடன் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் நாளன்று, சென்னை ஆளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் காவி ஆடை மற்றும் மதச் சின்னங் களுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை ஆளுநர் ஆர்.என். இரவி வெளியிட்டு திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தினார்.

2024 மே 24ஆம் நாள் ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட ‘வைகாசி அனுஷம்’ திருவள்ளுவர் திருநாள் விழாவின் மேடைப் பின்னணி மற்றும் அழைப்பிதழ்களில் காவி உடை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவர் படமே வைக்கப்பட்டு, அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசால் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப்படும் திருவள்ளுவர் படத்தில் எந்தவித மதக் குறியீடுகளுமின்றிதான் இருந்து வருகிறது. வெள்ளை நிற ஆடையுடன்!

ஆனால் ஓர் ஆளுநர், அரசின் கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டது   அவரின் இந்துத்துவா சிந்தனைக்கான எடுத்துக்காட்டே!

திருவள்ளுவரை இந்துத்துவா முத்திரை குத்தும் சூழ்ச்சி இன்று நேற்றல்ல – பரிமேலழகர் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் (13ஆம் நூற்றாண்டு) ஆரம்பித்துக் கொடுத்தார்.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறமாவது – ‘‘மனு முதலிய நூல்களில் விதித்தன செய்ததும், விலக்கியதை ஒழித்தலும் ஆம், அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார் பரிமேலழகர்.

காஞ்சி சங்கராச்சாரியாராகவிருந்த ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

‘‘நல்ல குணம் வளர திருக்குறளில் உள்ள அறத்துப்பாலில் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறாரோ, அதைச் சொல்லிக் கொடுத்தால் போதும், வேதத்தின் சாரம் அதிலுள்ளது. திருக்குறளில் பொருட்பால், காமத்துப்பால் முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப்பாலை இந்தக் காலத்து சினிமாக்களே சொல்லிக் கொடுத்து வருகின்றன’’ (‘தினமணி’ 16.3.1992) என்கிறார் ஜெயேந்திர சரஸ்வதி.

திருக்குறளின் அறத்துப்பால் என்றால் மனுதர்மத்தின் சாரம் என்கிறார் பரிமேலழகர்.  சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கூற்றும், பரிமேலழகரின் உரையும் ஒரு நாணயத்தின்  இரு பக்கங்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இவற்றையெல்லாம்விட இறந்து போன மூத்த காஞ்சி சங்கராச்சாரியார்  சந்திரசேகரேந்திர சரஸ்வதியோ ‘ஆண்டாளின்’ தீக்குறளைச் சென்றோதோம்? என்ற வரிக்கு ‘தீய திருக்குறளைச் சென்றோதோம்’ என்று பொருள் விளக்கம் சொல்லவில்லையா?

ஆண்டாள் சொன்ன குறள் என்பதற்கான பொருள்: கோள் சொல்லுதல், புறங்கூறுதல், அவதூறு பரப்புதல், பொல்லாங்கு சொல்லுதல் என்பதாகும்.

இதற்கு நேர் எதிராக காஞ்சி சங்கராச்சாரியார்  சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறுவது பொல்லாங்குதானே!

ஆக பரிமேலழகர் காலத்திலிருந்து உலகப் பொதுமறை என்று திருக்குறள் ோபற்றப்படுவதும், உலகில் 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான திருக்குறள் தமிழ்மொழியைச் சார்ந்தது என்பதால் ஆரியப் பார்ப்பனக் கூட்டம் காழ்ப்புணர்ச்சியின் எல்லையில் நின்று, அதன் மதிப்பை சாதுர்யமாகக் குறை கூறும் அற்பப்புத்தியுடன் செயல்பட்டு வருகிறது என்பதை உணர வேண்டும்.

இப்பொழுது த.வெ.க. ஆட்சிக் காலத்தில், அரசுக்குச் சொந்தமான ஒரு கட்டடத்தில் மத அடையாளங்களுடன் திருவள்ளுவர் உருவத்தைத் தீட்டியது எப்படி? எந்தப் பின்னணி? யார் கொடுத்த துணிச்சல்?

எதிர்ப்பின் காரணமாக மாற்றப்பட்டது என்பது தற்போதைய தகவலாகும்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *