காஸாவில் தொடரும் இனப்படுகொலை; இஸ்ரேல் மீது பன்னாட்டு நடவடிக்கை தேவை! பேராசிரியர் ஜவாஹிருல்லா கோரிக்கை!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ.3- காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் தொடர்கிறது. இது குறித்து அய்க்கிய நாடுகள் சபையின் சுயாதீன பன்னாட்டு விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தரப்பட்டுள்ள தகவல்கள் பேரதிர்ச்சியளிக்கிறது. எனவே இஸ்ரேல் மீதான உடனடி பன்னாட்டு நடவடிக்கை தேவை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி யுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது

அக்டோபர் 26, 2026 அன்று வெளி யிடப்பட்ட இந்த அறிக்கை, ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் சிறீனிவாசன் முரளிதர் தலைமை யிலான அய்.நா. சுயாதீன பன்னாட்டு விசாரணை ஆணை யத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.

2023 அக்டோபர் 7 முதல் 2026 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனப் பொது மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசு மற்றும் அதன் பாதுகாப்புப் படைகள் இழைத்துள்ள குற்றங்களை இந்த அறிக்கை விரிவாக ஆவணப் படுத்தியுள்ளது.

காஸாவில் பாலஸ்தீன மக்களை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலிய அதிகாரி களும் ராணுவப் படைகளும் போர் நிறுத்தத்திற்குப் பிறகும் இனப்படுகொலைச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

காஸாவில் மட்டுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் நிலைமை மிக மோசமடைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளும் சட்ட விரோதக் குடியேறிகளின் தொடர் வன்முறைகளும் இணைந்து பாலஸ்தீனப் பொதுமக்களுக்கு எதிரான பரவலான, திட்டமிட்ட தாக்குதலாக மாறியுள்ளன.

மேற்குக் கரையில் அழித் தொழித்தல், துன்புறுத்தல், சித்திர வதை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப் பட்டுள்ளதாகவும், பாலஸ்தீனக் குழந்தைகள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.

2025 ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளால் 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு மக்கள் இடம் பெயர்ந் துள்ளனர். 2026 ஆகஸ்ட் நிலவரப்படி 34,176 பேர் தங்கள் வாழ்விடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில், அய்க்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை பன்னாட்டு சமூகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டும்.

எனவே, இந்தியா உள்ளிட்ட அய்.நா. உறுப்பு நாடுகள் இனப் படுகொலையைத் தடுப்பதற்கான பன்னாட்டு சட்டக் கடமைகளை உடனடியாக நிறைவேற்ற முன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *