நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  நவம்பர் மாதத்தில் இயல்பைவிட கூடுதலாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.1- நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட கூடுதலாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது.

நவம்பர் மாத அறிவிப்பு

இந்திய வானிலை ஆய்வு மய்யம் நவம்பர் மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவித்து உள்ளது.  அந்தவகையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு முதல் இயல்பை விட குறைந்த அளவு வெப்பம் பதிவாகும். இதைப்போல இமயமலை அடிவாரப்பகுதிகளை தவிர மீதமுள்ள பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட கூடுதலாக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது.

குறைந்த மழையளவு

அதேநேரம் இமயமலை அடிவாரப்பகுதிகளில் இயல்பு முதல் இயல்பை விட குறைந்த அளவு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்.  நவம்பர் மாதத்தில் மழையளவை பொறுத்தவரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைந்த அளவு மழைப்பொழிவு இருக்கும். அதேநேரம் மத்திய, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் இயல்பானது முதல் இயல்பை விட அதிக அளவு மழையை எதிர்பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்த மாதம் 77 சதவீத நீண்ட கால சராசரி மழையளவு இருக்கும். கடந்த 1971 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் நவம்பர் மாத சராசரி நீண்ட கால மழையளவு என்பது 29.7 மி.மீ. ஆகும்.

எல் நினோ தாக்கம்

தற்போது மிகவும் வலுவான எல் நினோ தாக்கங்கள் நீடித்து வருவதைச் சுட்டிக்காட்டி உள்ள வானிலை ஆய்வு மய்யம், நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மிகவும் வலுவான எல் நினோ நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய பருவமழை திட்ட ஒருங்கிணைந்த முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் பிற உலகளாவிய காலநிலை மாதிரி முன்னறிவிப்புகள் குறிப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளது.  நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மய்யம் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *