சென்னை, நவ.1 ‘கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல. விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் கலையரசன் நேற்று (31.10.2026) திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இது குறித்து அவர் வெளி யிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக் குவது நல்லாட்சியல்ல; கேள்வி களுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி. விமர்சனங்களை உள் வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால், காவல் துறை நடவடிக்கைகளால் அல்ல.
ஃபேக் அய்டி-யின் கருத்தை காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்.
சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்’ என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
