“வேலை பார்க்கத் தெரிந்தவரிடம் காவல் துறையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒப்படைக்க வேண்டும்” தி.மு.க. எம்.பி. கனிமொழி இராஜாத்தி கருணாநிதி

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 24- “பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும்போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப் படை? தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?” என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இராஜாத்தி கருணாநிதி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும் வீட்டில் கோபித் துக்கொண்டு வேளாங் கண்ணிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கொடூரம் நடந்துள்ளது.

இத்தகைய குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசு காட்டும் மெத்தனத்தால் பெண் களுக்கு எதிரான வன்முறை நடத்தப் படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

தமிழ்நாட்டுப் பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி!

இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு எக்ஸ் தளப் பதிவில், “குலசேகரன்பட்டினம் தசரா  விழாவில் இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை; தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை; திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே காவலாளிக்கு அரிவாள் வெட்டு என தூத்துக்குடி மாவட்டமே தவெக ஆட்சியில் கொலைக்களமாக மாறிவிட்டது.

எவ்வித பொறுப்புணர்வுமின்றி ஆட்சியிலிருக்கும் தவெக அரசு, எத்தனை உயிர்ப்போனாலும் நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் தானே இதுபோன்ற கொலைக் குற்றங்கள் தொடர்கின்றன.

முதலமைச்சர் ஜோசப் விஜய், மக்கள் மீது கருணை காட்டி எதேனும் வேலைப் பார்க்க தெரிந்தவரிடம் காவல் துறையை ஒப்படைக்க வேண்டும்.

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய் யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவுக்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளி யிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.

பெண்களுக்கு எதிரான வன் முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும்போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *