திராவிடர் கழகத்தின் சிதம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல்” விருது தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஆர்வலர் என்று தேர்ந்தெடுத்து, அவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் இன்று (1.11.2026) வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் விருது பெற்ற பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
