ஜலகண்டபுரம் அ. முருகேசன் மறைவு! தமிழர் தலைவர் இரங்கல்

- Advertisement -

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரின் தங்கை மாமனாரும், இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கும் நமது தோழரும், பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டச் செயல்பாட்டாளருமான பொறியாளர் மு.கிருபாசங்கர் அவர்களின் தந்தையாருமான ஜலகண்டபுரம் அ. முருகேசன் (வயது 75) அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக, சேலத்தில் நேற்றுமுன்தினம் (29.10.2026)  மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவர்தம் வாழ்விணையர் வசந்தரா, மருமகள் பிரின்சசு பேராண்டாளு மங்கை, பேரன்  புத்தன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த  இரங்கலையும்,  ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

31.10.2026       

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *