நாமக்கல் மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவர் – பெரியார் பெருந்தொண்டர் வை.நடராசன் (வயது 92) அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். சிறிதுகாலம் திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திலும் தங்கியிருந்தார்.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
21.07.2026
குறிப்பு: நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக அளிக்கப்பட்டது.
