உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி வா்த்தக தளமான ‘பைனான்ஸ்’ தளத்தில் சுமார் 630 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.59,818 கோடி) மதிப்பிலான மின்னணு சொத்துகள் அடை யாளம் தெரியாத நபா்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 29.10.2026 அன்று இரவு சுமார் 20 நிமிட இடைவேளையில் இந்த மின்னல் வேகத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. கிரிப்டோ வரலாற்றிலேயே இதுவரை நிகழாத இந்த மாபெரும் இணையவழி திருட்டு சம்பவம், உலகளாவிய முதலீட்டா ளா்களிடையே கடும் அதிர்ச்சி யையும், கலக்கத்தையும் ஏற் படுத்தியுள்ளது.
பைனான்ஸ் நிறுவனத்தின் பரிவா்த்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் எண்மக் கட்டமைப்பில் ஊடுருவிய ஹேக்கா்கள், 10 வெவ்வேறு பிளாக்செயின்களில் வைக்கப் பட்டிருந்த பலதரப்பட்ட கிரிப்டோ சொத்துகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் சட்டவிரோதமாக மாற்றி யுள்ளனா். இந்த ஊடுருவலைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தளத்தின் வைப்புத்தொகை மற்றும் பணம் எடுக்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டன.
வடகொரியாவின் பின்னணியா?
இச்சம்பவம் குறித்து அமெரிக்காவின் முக்கிய பிளாக்செயின் ஆய்வு நிறுவனங் களான ‘டிஆா்எம் லேப்ஸ்’ மற்றும் ‘செயினாலிசிஸ்’ விரிவான ஆய்வுகளை மேற் கொண்டுள்ளன. இத்தாக்குதல் வட கொரியாவின் பிரபல சைபா் குற்றக் குழுவான ‘டிரேடா் ட்ரெய்டா்’ மூலம் நடத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளதாக அந் நிறுவனங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன. பொருளா தாரத் தடைகளை எதிர் கொள்ளும் வட கொரியா, தனது அணுசக்தித் திட்டங்களுக்கு நிதி திரட்ட இத்தகைய எண்மத் திருட்டுகளைத் தொடா்ந்து நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
திருடப்பட்ட மொத்த தொகையில் சுமார் 300 கோடி டாலா் மதிப்பிலான ‘ஸ்டேபிள்காயின்’ ரக சொத்துகள், டெதா், சா்க்கிள் உள்ளிட்ட விநியோக நிறு வனங்களின் உடனடி தலை யீட்டால் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன. எனினும், மய்யப்படுத்தப்பட்ட அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இல்லாத சுமார் 240 கோடி டாலா் மதிப்புள்ள பிட்காயின், ஈதா் போன்ற சொத்துகள் ஹேக்கா்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாகவும், அவற்றை மீட்பதில் கடும் சிக்கல் நிலவுவதாகவும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
பைனான்ஸ் நிறுவனா் சாங்பெங் ஜாவோ, சிஇஓ ரிச்சா்ட் டெங் ஆகியோர் இச்சம்பவம் குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளனா். நிறுவனத்தின் சிறப்பு அவசரக்கால இருப்பு நிதி மற்றும் இதர சொந்த நிதி ஆதாரங்களின் வாயிலாகப் பாதிக்கப்பட்ட பயனா்களின் இழப்புகள் அனைத்தும் ஈடுசெய்யப்படும் என்றும், வாடிக்கையாளா்களின் சொத்துகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவா்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.
மேலும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத் தின்முன் நிறுத்த பன்னாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக நிறுவனம் கூறி யுள்ளது. இருப்பினும், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான கோடிகள் இணைய வழியில் மாயமானது, பன்னாட்டு அளவில் கிரிப்டோகரன்சிகளின் பாது காப்பு மற்றும் ஒழுங்கு முறை விதிகள் மீதான கேள்வி களை மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது.
