சி.பல்லவன்-கோ.பரிமளா வாழ்க்கை இணையேற்பு விழா! துணைப் பொதுச் செயலாளர் நடத்தி வைத்தார்

2 Min Read
- Advertisement -

வாணியம்பாடி, அக். 30– 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு திருப்பத்தூர், பள்ளிப்பட்டுச் சாலையில் உள்ள வி.கே.சிறீதர் விழா அரங்கில், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெ.சின்னதம்பி – செ.வாசுகி ஆகியோரின் மகன் சி.பல்லவன் – தருமபுரி மாவட்டம், பேதாம்பட்டி கிராமம் க.அருணகிரி-கோ. பரிமளா ஆகியோரின் மகள் ஹரினி ஆகியோரின் ‘சுயமரியாதை வாழ்க்கை இணை யேற்பு விழா’ நடைபெற்றது.

இணையேற்பு விழாவை, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா .கதிரவன் ஒருங்கிணைத்து நடத்தினார்.  பெ. சின்னத்தம்பி வரவேற்புரை ஆற்றினார்.

இணையேற்பு விழாவில் ஆர். செல்வராஜ், பி.ஜி. கமலநாதன், கா.கபிலன், காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் கி.இளையவேள், துணைச் செயலாளர் சீத்தாவரம் ஆ.மோகன், மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் வீ.கோவிந்த ராஜ், வாணியம்பாடி  நகர கழகத் தலைவர் அன்புச் சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரை ஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையேற்று உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். அவர் தம் உரையில், சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவம், அதற்காகத் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் செயல் பாடுகள் குறித்து விளக்கிக் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் அ.வெ முரளி, திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பெ. கலைவாணன்,  மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், காஞ்சி புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பருதி, காஞ்சி மாநகர கழகத் தலைவர் ந.சிதம்பரநாதன், முனைவர் செ.கருணாநிதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  மருத்துவர் சி. பகலவன் அனைவருக்கும் நன்றிகூறினார்.

இணை ஏற்பு விழாவில், கந்திலி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ.ரா. கனக ராஜ்,  திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலா ளர் கோ. திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் கே. இராஜேந்திரன், ஆசிரியர் ர.உஷா உள்ளிட்ட கழகத் தோழர்களும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தோழர்க ளும் ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *