சென்னை, அக். 30- மின்சாரத் துறையில் கோரப்பட்ட விலை சாத் தியமில்லாததால் குறுகிய கால ஒப்பந்தம் ரத்து செய்யப் படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
2027 பிப்ரவரி – ஜூலை இடையிலான தேவைக்கு 1,500 மெகாவாட், 2026 நவம்பர் – 2027 மே வரை யிலான மாலை நேர மின் தேவையைச் சமாளிப் பதற்காக மாதத்துக்கு 1,000 மெகாவாட், 2026 நவம்பர் – 2027 ஜனவரி இடையிலான மின் தேவைக்காக 4,900 மெகாவாட் மின்சாரம் என 4 குறுகிய கால ஒப்பந் தத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.
இதனிடையே, உச்ச நேரத்துக்கான மின்தேவை ஒப்பந்தம் திறக்கப்பட்ட நிலையில், அதில் கோரப் பட்ட விலை சாத்தியமில்லை எனக் கூறப்பட்டதால், குறுகிய காலஒப்பந்தத்தை மின்சாரத் துறை ரத்து செய்துள்ளது.
முன்னதாக, வெளிச் சந்தையில் ரூ. 41.5, ரூ. 35க்கு மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களும் ரத்து செய் யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
