பத்தினம்திட்டா, அக்.27- கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய நெய்யில் மிகப்பெரிய முறைகேடு செய்ததாக, போக்குவரத்து ஒப்பந்த தாரர் எஸ்.எஸ். பினு என்பவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் (SIU) கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பதிவான முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.
சபரிமலை கோயிலுக்கு அரசு கூட்டுறவு நிறுவனமான ‘மில்மா’ மூலம் விநியோகிக்க அனுப்பப்பட்ட சுமார் 11,040 கிலோ உயர்தர நெய்யை பினு திட்டமிட்டு முறைகேடு செய்துள்ளார். மில்மா நிறுவனத்தில் இருந்து நெய்யைக் கொண்டு செல்லும் வழியில், அதைத் தமிழ்நாட்டில் உள்ள இரு தனியார் நிறுவனங்களுக்கு விற்றுள்ளார்.
அதற்குப் பதிலாக, தரமற்ற மற்றும் மலிவான விலையிலான நெய்யை சபரிமலை கோயிலுக்கு மாற்றி அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரூ.2.5 கோடி இழப்பு
இந்த நெய் முறைகேடு காரணமாக திருவி தாங்கூர் தேவசம் போர்டுக்கு சுமார் ரூ. 2.5 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கோயில் நெய்யில் நடத்தப்பட்ட இந்த மோசடி பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான ஒப்பந்ததாரரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
