இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பிறந்த நாள் இன்று (27.10.1920)

2 Min Read
- Advertisement -

திருவிதாங்கூர் சமஸ்தான ஆளுமையின் கீழ் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த  கே.ஆர். நாராயணன், கல்வி கற்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கல்வி அவருக்கு மறுக்கப்பட்டது. இதனால் அவர் அப்போதைய திவான் (பிரதம அமைச்சர்) சி.பி. ராமசுவாமி அய்யர் அவர்களை சந்தித்து உதவி கோரினார்.

அதற்கு  ‘‘நீ படிக்கவோ உயர் பதவிக்கான நாற்காலியில் உட்கார தகுதியற்றவன்; அப்படியே உட்கார்ந்தாலும் உன்னிடம் யாருமே வர மாட்டார்கள்;  வீணாகப் படித்து உன்னுடைய எதிர்காலத்தை அழித்து விடாதே’’ என்று கூறிய திருவிதாங்கூர் திவான்(பிரதமர்) சி.பி. ராமசாமி அய்யர் கே.ஆர். நாராயணனுக்கு சில தென்னை மரக்கன்றுகளை கொடுத்தது மட்டுமல்லாமல் – ‘‘உனது ஜாதித்தொழிலான தென்னை மரம் ஏறி ‘கள்’ இறக்கி விற்கும் தொழில் தான் உனக்கு உகந்தது’’ என்று கூறி இழிவுபடுத்தினார். இந்த நிகழ்வு, கே.ஆர். நாராயணனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிகழ்விற்குப் பிறகு, கே.ஆர். நாராயணன்  கொச்சி டயோசியஸில் உள்ள கிறிஸ்தவ பேராயர் ஒருவரின் உதவியால் உயர்கல்வி பயில லண்டன் சென்று பொரு ளாதாரத் துறையில் பட்டம் பெற்றார்.

பின்னர், இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்து, பல்வேறு நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றினார். இறுதியில், இந்தியாவின் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஆனார்.`

கே.ஆர். நாராயணன் இந்தியக் குடியரசுத் தலை வராக 1997 முதல் 2002 வரை பதவி வகித்தார். அவரது பதவிக்காலத்தில் பல முக்கியமான சட்டங்கள் அமலுக்கு வந்தன, அவை இந்தியாவின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு பங்களித்தன.

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் சட்டம், 2005 குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவும், சட்டரீதியான நிவாரணம் வழங்கவும் இந்தச் சட்டம் உதவியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: இந்தச் சட்டம் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து, பொதுமக்களுக்கு அரசுத் தகவல்களைப் பெறும் உரிமையை வழங்கியது.

73 ஆம் மற்றும் 74ஆம் அரசியல் சாசன திருத்தங்கள் (1992) மூலம் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேலும் வலுப்பெற்றன.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (NREGA, 2005)  ஊரகப் பகுதிகளில் உள்ளவர் களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப் பட்டது, இது வறுமையைக் குறைப்பதற்கு முக்கிய பங்காற்றியது.

கே. ஆர். நாராயணனின் பதவிக்காலம் சமூக நீதி, பொருளாதார சமத்துவம் மற்றும் மக்களாட்சியை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பு செய்தது.

இவர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் நாளில் தமது 85 ஆவது வயதில் புதுடில்லியில் மறைவுற்றார்.

தகவல் : பாணாவரம் பெ.வீரமணி

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *