இந்நாள் – அந்நாள்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கல்வி வள்ளல் காமராசர்
நினைவு நாள் இன்று (02-10-1975)

 

பச்சைத் தமிழர், கல்வி வள்ளல் காமராசரை தந்தை பெரியார் அவர்கள் வற்புறுத்தி தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்க வைத்தார். அதற்கு முன் பல முதலமைச்சர்களை உருவாக்கியவர் காமராசர். அவரை முதலமைச்சராக அமர முழு ஒத்துழைப்பு உறுதி கூறி, தமிழ்நாட்டின் கல்வி புரட்சிக்கும், சமூகப் புரட்சிக்கும் வழி வகுத்தார் தந்தை பெரியார்!

காமராசரின் சமதர்ம ஆட்சியைக் கண்டு – பசுவதைத் தடுப்பு என்ற சாக்கில் – நிர்வாண சாமியார்கள்,  சாதுக்கள் என்ற பெயரில் காமராசரை கொலை செய்ய,  அவரது புதுடில்லியில் உள்ள வீட்டிற்குத் தீ வைக்க  மதவெறிக் காவி கும்பல் செய்த முயற்சியையும் தாண்டி வரலாற்று சாதனை படைத்த தொழிற்புரட்சிக்கு வித்திட்ட காமராசரின் இந் நினைவு நாளில் (02-10-1975) அவரது புகழைப் போற்றி நினைவு கூர்வோம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர், காமராசரின் பிறந்த நாளை “கல்வி நாளாக”க் கொண்டாட தனிச் சட்டமே இயற்றி, அரசியல் மாச்சரியங்களைத் தாண்டினார்.  அதற்கு முன்பே காமராசருக்கு சரியாக நினைவுச் சின்னம் ஏற்படுத்தினார்.

கல்வி வள்ளல் காமராசர் என்றும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம் ஆவார்.

தகவல்: பாணாவரம் பெ. வீரமணி

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *