கோவை, அக் 26- 25.10.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.00 மணியளவில் கோவை சுதந்தராபுரம் குறிச்சி சரஸ்வதி சிற்றரங்கில் கோயமுத்தூர், பொள்ளாச்சி, தாராபுரம், திருப்பூர், மேட்டுப்பாளையம், நீலமலை, கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசி. நிகழ்வினை தொகுத்து வழங்கினார். கோவை மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல் கடவுள் மறுப்பு கூறினார்.
கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தலைமை ஏற்று உரையாற்றினார். பேசுகையில், நவம்பர்-4 கோவையில் நடைபெற உள்ள பாராட்டு விழாவிற்கு 8-கழக மாவட்டத் தோழர்கள் பெருமளவில் கலந்துக்கொள்ளவும், மாநகரம் முழுவதும் கழகக் கொடி, சுவர் எழுத்துகள், சுவரொட்டி, போன்ற விளம்பரங்கள் செய்வதும் குறித்தும், நிகழ்விற்கு வருகை தரும் திராவிட மாடல் நாயகர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிப்பது, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், உடனடியாக தோழர்கள் கழகப் பணியினை தொடங்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளர். கோபி மாவட்டத் தலைவர் மு.சென்னியப்பன், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் கி.மாரிமுத்து, தாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், கோவை மாவட்டச் செயலாளர் ஆ.பிரபாகரன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் பெ.செல்வராஜ், பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், தாராபுரம் மாவட்டச் செயலாளர் ஜெ.தம்பிபிரபாகரன், கோபி மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி, திராவிட மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர் ப.திலகவதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.வீரமணி, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த.சிவபாரதி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் ப.கலைச்செல்வி, திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மு.நாச்சிமுத்து, திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு.துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் செழியன், கோபி மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் மா.சூர்யா.ஆகியோர் கருத்துகள் தெரிவித்தனர்.
கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.பழனிச்சாமி, தாராபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பு.முருகேசன், தாராபுரம் பகுத்தறிவாளர் கழக நகர தலைவர் மு.மாரிமுத்து, பொள்ளாச்சி நகர செயலாளர் நாகராசன், பொதுக்குழு உறுப்பினர் குமரவேல், அ.மு.ராஜா, கோவை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சா.ராசா, கோவை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் த.க.கவுதமன், பொள்ளாச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மா.பிரவீன்குமார், தாராபுரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் கோடீஸ்வரன், பீளமேடு பகுதிச் செயலாளர் ம.ரமேஷ், சா.சிவக்குமார், கோவை வே.தமிழ்முரசு, சுந்தராபுரம் தி.க.வெற்றிச்செல்வன், ச.செல்வகுமார், நா.முருகசாமி, ச.திலகமணி, தமிழ்ச்செல்வி, சகுந்தலா, ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மாநில இளைஞ ரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி தீர்மானங்களை வாசித்து உரையாற்றினார். கோவை மாநகரச் செயலாளர் புலிய குளம் வீரமணி உரையாற்றி நன்றி கூறினார்.
திராவிட நாயகருக்கு திராவிடர் கழகத்தின் நன்றி பாராட்டு விழா.
தமிழ்நாடு வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்றுப் பெருமைகளில் ஒன்றாக 300 கோடி ரூபாய் செலவில் நவீன தகவல் தொழில்நுட்ப ஆய்வு உட்பட வசதி வாய்ப்புகள் “எல்லோருக்கும் அறிவு” என்று பரப்பிடும் வண்ணம் திராவிட மாடல் ஆட்சியில் கோவையில் “பெரியார் அறிவுலகம்” உருவாக்கி சாதனைச் சரித்திரம் படைத்த திராவிட மாடல் நாயகர் மேனாள் முதலமைச்சர் திமுக தலைவர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் 2026 நவம்பர்-4 புதன்கிழமை அன்று கோவையில் நன்றி பாராட்டுப் பெருவிழாவினை மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது,
பாராட்டு விழாவினை கோவையில் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. பாராட்டு விழாவில் பங்கேற்க நவம்பர்-4 கோவை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின், ஆகியோருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு தழுவிய அளவில் கழகத் தோழர்கள் அனை வரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
குடும்ப விழா
செப்டம்பர் -3 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தாராபுரம், திருப்பூர், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கழக குடும்ப விழாவினை நவம்பர் மாதத்திற்குள் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்து வயதில் மேடையில் பேசத் தொடங்கி 93-ஆண்டுகளை கடந்தும் பெரியாரின் கொள்கைப் பயணத்தை தொய்வின்றி தொடரும் திராவிட திசைகாட்டி திராவிட இயக்கத்தின் கொள்கை கருவூலம்! தமிழர்களின் காப்பரண்!! “உலகம் பெரியார் மயம்”. “பெரியார் உலக மயம்.” என நாளும் உழைத்து வரும் தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் 94 -ஆம் ஆண்டு பிறந்தநாள் (டிசம்பர்-2) விழாவினை அனைத்து மாவட்டங்களிலும் கழகக் கொடி ஏற்றுதல், இனிப்புகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், குருதிக்கொடை வழங்குதல், உள்ளிட்ட மனித நேயப் பணிகளை மேற்கொள்வது 94-ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கங்கள் பொதுக் கூட்டங்கள் புத்தக அறிமுக விழாக்களை நடத்துவது. சுயமரியாதை நாளாக டிசம்பர் மாதம் முழுவதும் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் -2 அன்று சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நமது குடும்பத் தலைவரை சந்தித்து விடுதலை, உண்மை சந்தாக்கள் மற்றும் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கி வாழ்த்தி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவரும் கோவை, அவிநாசி சாலையில் உள்ள அரசு உதவிபெறும் கே.கே.நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் 16-வயது அகிலன், அக்டோபர் -21 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தி பேரதிர்ச்சிக்குரியதாகும் கல்வி கற்கும் இடத்தில் “மாட்டுக்கறி சாப்பிடுவோர் யார்?” என்று கேள்வி எழுப்பும் அதன் மூலம் ஆசிரியரே பாகுபாட்டை உண்டாக்கும் ஊழலை உருவாக்குவது கொடுமை இதற்கு உடந்தையாகவும் இதை மறைக்கும் வகையில் செயல்பட்டவர்கள் அனைவரின் மீதும் தமிழ்நாடு அரசு உரிய உடனடி சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இக்கலந்துரையாடல் கேட்டுக்கொள்கிறது.
நீதிக்காக போராடும் தோழர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்த்து நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
அருமை மாணவச் செல்வம் அகிலனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும். இரங்கலையும், ஆறுதலையும், இக்கூட்டம் தெரிவிக்கின்றது.
நவம்பர் -4 கோவை வருகைத் தரும் திராவிட மாடல் நாயகர் மானமிகு மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு. கோவை விமான நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

நன்றி பாராட்டு விழா ஏற்பாட்டுக்குழு
ஒருங்கிணைப்பாளர்கள்
வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர்
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்.
ஏற்பாடுக்குழு தலைவர்
ம.சந்திரசேகரன் கோவை மாவட்ட தலைவர்
ஏற்பாட்டுக்குழு செயலாளர் ஆ.பிரபாகரன்.
கோவை மாவட்ட செயலாளர்
ஏற்பாட்டுக்குழு.
பேராசிரியர் மு.தவமணி, கோவை, மு.சென்னியப்பன், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கோபி மாவட்டத் தலைவர், இரா.கவுதமன, பெரியார் மருத்துவக் குழுமத் தலைவர், த.சண்முகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர், நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி செயலாளர் சு.வேலுச்சாமி, மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர், யாழ்.ஆறுச்சாமி திருப்பூர் மாவட்டத் தலைவர், மு.நாகேந்திரன், நீலமலை மாவட்டத் தலைவர், சி.மாரிமுத்து, பொள்ளாச்சி மாவட்டத் தலைவர், க.கிருஷ்ணன், தாராபுரம் மாவட்டத் தலைவர், து.நல்லசிவம், ஈரோடு மாவட்டத்தலைவர், கா.சு.ரங்கசாமி, மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர், பெ.செல்வராஜ், திருப்பூர் மாவட்டச் செயலாளர், அ.ரவிச்சந்திரன், பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர், ஜெ.தம்பிபிரபாகரன், தாராபுரம் மாவட்டச் செயலாளர், ச.ஜீவா நீலமலை மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன், கோபி மாவட்டச் செயலாளர், மா.மணிமாறன், ஈரோடு மாவட்டச் செயலாளர், ஆ.பாண்டியன், வழக்குரைஞர் அணி மாநில துணைத் தலைவர், தரும.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர், ப. திலகவதி, திராவிட மகளிர் பாசறை மாநில துணைச்செயலாளர் மு.வீரமணி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர், ப.வெற்றிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், மு.ராகுலன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் த.சிவபாரதி, திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் பழ.அன்பரசு, கோவை மாவட்டத் துணைத் தலைவர் இல.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் க.முத்து மாலையப்பன், பொதுக்குழு உறுப்பினர் கா.காளிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி, கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அக்ரி.நாகராஜ், கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆர்.வெங்கடாசலம், கோவை மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் செ.முத்துமணி, கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் ப.கலைச்செல்வி, கோவை மாவட்ட மகளிர் அணி செயலாளர் த.செ.மதியரசு. மாவட்ட இளைஞரணி தலைவர் சா.திராவிடராசா, கோவை மாவட்ட இளைஞரணி செயலாளர். த.க.கவுதமன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ஞா.தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் ஆட்டோ சக்தி, வடவள்ளி. பகுதி தலைவர் பி.என்.ஜி.ராஜசேகர், வடவள்ளி பகுதி செயலாளர் ரமேஷ், பீளமேடு பகுதி தலைவர் பு.முருகானந்தம், பீளமேடு. பகுதி செயலாளர் கவிகிருஷ்ணன், கணபதி பகுதி தலைவர் த.திராவிடமணி, கணபதி பகுதி செயலாளர் கோவிந்தராஜ், புளியங்குளம் பகுதி செயலாளர் ஜெயக்குமார் சுந்தராபுரம் பகுதி செயலாளர்

முன்னாள் அமைச்சரும், திமுகவின் கோவை மண்டல பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜியை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கரூர் மாவட்ட தலைவர் ப.குமாரசாமி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர். சே.அன்பு, ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினர் (கரூர், 25.10.2026)
