சமூக வலைதளங்களில் அவதூறு சென்னை மாநகர மேயர் பிரியா காவல் ஆணையரிடம் புகார்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 28- அடையாளம் தெரி யாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, சென்னை காவல் ஆணையரிடம், மேயர் பிரியா புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை காவல் ஆணையரிடம் இணைய தளம் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் தன்னை குறித்து அவதூறான தகவல்கள் மற்றும் தவறான பதிவுகள் பரப்பப்படுகிறது.

இதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. மேலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் அதிகாரப் பூர்வ தொலைபேசி எண்ணுக்கும், அடையாளம் தெரியாத நபர்கள் மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டு தொந்தரவு அளித்து வருகின்றனர். இதனால் அலுவலக பணிகளும் பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேயர் பிரியாவின் புகாரின் அடிப்படையில், சென்னை காவல்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப் பட்ட பதிவுகள், பயன்படுத்தப்பட்ட கைப்பேசி எண்கள், சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் அவற்றின்
அய்.பி. முகவரி உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தேவையானால், இந்த வழக்கு சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கும் மாற்றப்பட்டு, சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்படலாம் என்றும் கூறப்படுகிறது.சென்னை மாநகராட்சி மேயரே அடையாளம் தெரியாத நபர்களின் இணைய வழியில் தொல்லை குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *