பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் முன்னோர்களின் தங்கத்தை மாந்திரீக சடங்குகள் மூலம் எடுத்துத் தருவதாகக் கூறி, 79 வயது முதியவரிடம் சுமார் ரூ.39.3 லட்சம் பணத்தையும், ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும் ஏமாற்றி திருடிச் சென்ற மந்திரவாதி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் (15.10.2026) கைது செய்தனர்.
டில்லியைச் சேர்ந்த கிரிஜேஷ் சிங் (79) என்ற முதியவரிடம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உண்மையான தங்க நாணயம் ஒன்றைக் காட்டி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். “உங்கள் பூமிக்கடியில் முன்னோர்களின் பெருமளவு செல்வம் புதைந்து கிடக்கிறது; அதை மாந்திரீக சடங்குகள் மூலம் எடுத்துத் தருகிறோம்” எனக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
அவர்களின் வார்த்தையை நம்பிய முதிய வரிடமிருந்து ரொக்கமாகவும், யுபிஅய் பரிவர்த் தனைகள் மூலமாகவும் சிறுகச் சிறுக சுமார் ரூ.39.3 லட்சம் வரை மோசடியாளர்கள் பறித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவில், முதியவரின் வீட்டிலேயே மாந்திரீக பூஜை சடங்கு நடத்துவது போல நாடகமாடியுள்ளனர். அப்போது மண்ணும், போலியான தங்கக் கட்டிகளும் நிரப்பப்பட்ட எஃகு பாத்திரங்களைப் பயன்படுத்தி சடங்குகளைச் செய்துள்ளனர்.
அச்சமயத்தில், முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்துள்ளனர். பின்னர், அவரது வீட்டிலிருந்த பீரோவைத் திறந்து, அங்கிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தப்பியோடிவிட்டனர். சுயநினைவு திரும்பிய பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிரிஜேஷ் சிங், இதுகுறித்து சீமாபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முதியவரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். ‘கிருஷ்ணா பண்டிட்’ என்ற பெயரில் உலா வந்த முக்கிய குற்றவாளியை உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகரின் அம்பா விஹாரில் காவல்துறையினர் கண்டறிந்தனர். விசாரணையில் அவர் தஹ்சின் என்பது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மந்திரவாதியை முதியவரிடம் காட்டி பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவியாக இருந்த மற்ற இரு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற பல்வேறு போலி அடையாளங்களைப் பயன் படுத்தி, மாந்திரீக நாடகமாடி, இதுபோன்று பணம் மற்றும் பொருட்களைப் பறிப்பதை இவர்கள் வழக்கமாகக்கொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜோதிடம், மந்திரம், மாந்திரீகம் என்பதெல்லாம் உண்மையல்ல; அசல் மோசடிச் சமாச்சாரங்கள் என்று பகுத்தறிவாளர்கள் சொல்லுவதெல்லாம் எத்தகைய உண்மை என்பதை இது போன்ற மோசடிகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
புட்டபர்த்தி சாயிபாபாவே அம்பலப் படுத்தப்பட்டாரே!
பி.சி.சர்க்கார் என்ற பகுத்தறிவாளர் (மேஜிக் வல்லுநர்) சாயிபாபா கூடாரத்திலேயே நுழைந்து, சாயிபாபா முன்னிலையிலேயே கை அசைப்பில் லட்டுவை வரவழைத்துக் காட்டி சாயிபாபாவின் மூக்கை உடைக்கவில்லையா?
அந்த சாயிபாபாவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, மாதக் கணக்கில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கவில்லையா?
இருந்தும் பயனில்லாமல் மரணம் அடைய வில்லையா? இதை எல்லாம் எடுத்துச் ெசால் வதற்குக் காரணம், தனிப்பட்ட முறையில் இரணப்படுத்துவதற்காக அல்ல – மனிதா உனக்குப் பகுத்தறிவு இருக்கிறது – மூடத்தனக் குழியில் வீழ்ந்து அவதிப்படாதே என்று எச்சரிக்கத்தான்.
மந்திரத்தால் மாங்காய் வீழாது!
மிக்கடியில் புதைந்து கிடக்கும் முன்னோர் களின் தங்கத்தை மாந்திரீக சடங்குகள் மூலம் எடுத்துத் தருவதாகக் கூறி, 79 வயது முதியவரிடம் சுமார் ரூ.39.3 லட்சம் பணத்தையும், ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும் ஏமாற்றி திருடிச் சென்ற மந்திரவாதி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் (15.10.2026) கைது செய்தனர்.