– கருஞ்சட்டை – விரதத்தால் வீழ்ந்த ஓர் உயிர்!

- Advertisement -

பீகார் மாநிலம் சகால் மாவட்டத்தில், நவராத்திரியின் போது ஒன்பது நாட்கள் கடுமையான விரதமிருந்த சஞ்சிதா யாதவ் என்ற பெண் மரணமடைந்தார் என்ற ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

‘‘இந்த ஆண்டு நவராத்திரி விரதத்தின் போது உணவுப்பொருள் பிரசாதம் அடங்கிய பானையை தலையில் சுமந்துகொண்டு விரதமிருந்தால், இறுதி நாளில் துர்கா தேவி, கேட்டவரம் கொடுப்பாள்’’ என்ற   சமூக வலைதளத்தில் யாரோ அனுப்பியதை வைத்து பொரி, கடலை, எள்ளு, தேங்காய்   கற்கண்டு மற்றும் வெல்லம் போன்றவற்றை  பெரிய கூடையில் வைத்து, அந்தக் கூடையின் நடுவில் கங்கை நீர் ஊற்றிய  பானையில் இட்டு, அதனை  தரையில் வைக்காமல், தலையிலும், மார்பிலும் 9 நாள் சுமந்துகொண்டும், வைத்துக் கொண்டும் கடுமையான  விரதம் இருந்தார்,

அவ்வப்போது தண்ணீரும், உருளைக்கிழங்கு சிப்ஸ் மட்டுமே உட்கொண்டார்.  எண்ணெய்யில் பொரித்த உணவைக் கரைக்க, உடல் சேமித்து வைத்த நீரை  அதிகம் எடுத்துகொண்டே இருந்தது. இதனால் கல்லீரலுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது. போதுமான நீர்ச்சத்து இல்லாததால், ரத்ததில் இருந்து நீரை எடுக்கத் துவங்கியது; இதனால் ரத்தம் கடினத்தன்மை அடைந்து இதயச் செயலிழப்பு ஏற்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்ததார்

மூடநம்பிக்கை மற்றும் தீவிரமான மத அனுஷ்டா னங்களின் பெயரில் தொடரும் இத்தகைய ஆபத்தான நடைமுறைகள் மீண்டும் ஓர் உயிரைப் பலிவாங்கியுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

21 ஆம் நூற்றாண்டிலும் இது போன்ற மூட நம்பிக்கைகளும், அறிவியல் பூர்வமற்ற ஆபத்தான வழிபாட்டு முறைகளும் தொடர்வது மிகவும் கொடுமை யானதாகும்

மனித உடல் இயங்குவதற்குத் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவசியமானவை. பல நாட்கள் நீர் அருந்தாமல் இருப்பது, சிறுநீரகச் செயலிழப்பு, இரத்த ஓட்டம் தடைபடுதல் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும். மதச்சடங்குகள் ஏதாவது ஒரு வகையில் மக்களை எப்போதும் பாதிக்கும் ஒன்றாகவே உள்ளது இந்தச்சடங்குகளால் சுகபோகமாக வயிறு வளர்ப்பவர்கள் பார்ப்பனர்களே! அவர்களின் சுகபோகத்திற்காக வெகுஜன மக்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு உடலை வருத்தும் ஆபத்தான சடங்குமுறைகளை கடைப்பிடிக்கின்றனர், ஆண்டு தோறும் நவராத்திரி அன்று நாக்கை வெட்டுவது, விரலை வெட்டுவது போன்ற கொடூரமான நேர்த்திக் கடன்கள் வட இந்தியாவில் நடக்கும்; அது அவ்வப்போது செய்தியாக வரும்.  இந்த ஆண்டு ஓர் உயிர் பறிபோயுள்ளது.

இவற்றை எல்லாம் படிக்கும் போதும், பார்க்கும் போதும் பகுத்தறிவாளர்கள் பதை பதைக்கிறார்கள். சினம் கொள்வதில்லை. மனிதாபிமானம் காரணமாக இந்த மூட நோயிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எகிறிக் குதிக்கிறது!

மூட நம்பிக்கையால், மதப் போதையால் மரணப் படுகுழியில் விழும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற தாய் உள்ளமே தந்தை பெரியாரை 95 வயது வரை பாடுபட வைத்தது!

‘கடவுளை மற – மனிதனை நினை’ என்று திருக்குறளைவிட குறைந்த சொற்களால் கருத்தறிவித்த காலக்கதிரவன் தந்தை பெரியாரின் சிந்தனை ஒளி, ஊரெங்கும், நாடெங்கும், உலகமெங்கும் பரவவேண்டும்.

இப்பொழுது பரவிக் கொண்டுதான் இருக்கிறது. ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னது, வெறும் அழகுச் சொற்கள் அல்ல. மனிதனைப் பிடித்து உலுக்கும் மூட நோயைப் போக்கும் அருமருந்தாகும்!

வாழ்க பெரியார்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *