திருத்தணி, அக். 25- உண்மை வாசகர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, “என் பார்வையில் பெரியார்” என்ற தலைப்பிலான கவியரங்கம் 24.10.2026 அன்று மாலை 4 மணிக்கு பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கவிஞர்கள் கவியன்பன், கவிஞர் பிரகாசம் தங்களது கவிதைகள் வாயிலாகத் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், சமூக நீதி, சமத்து வம் மற்றும் சுயமரியாதைக் கொள் கைகளை எடுத்துரைத்தனர். பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் கவியரங்கம் சிறப்பாக அமைந்தது.
இந்நிகழ்வில் கவிஞர் கி.எழில், தேசய்யா, சி.நீ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரமேஷ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். முன்பாக கழகப் பாடகர் பன்னீர் செல்வம் கழகப் பாடல்களை பாடி உற் சாகப்படுத்தினார். இதில் பெரியார் பிஞ்சு மாணவர்கள் கவிதை வாசிக்க, தமிழ் ஆர்வலர் பாசறை க.புவியரசு மற்றும் பெரியார் சிந்தனையாளர் மத்தூர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இறுதியாக மகளிரணித் தோழியர் யமுனா நன்றி கூறினார்கள்.
