திருத்தணியில் “என் பார்வையில் பெரியார்”–கவியரங்கம்

- Advertisement -

திருத்தணி, அக். 25- உண்மை வாசகர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, “என் பார்வையில் பெரியார்”  என்ற தலைப்பிலான கவியரங்கம் 24.10.2026 அன்று மாலை 4 மணிக்கு பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கவிஞர்கள் கவியன்பன், கவிஞர் பிரகாசம் தங்களது கவிதைகள் வாயிலாகத் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், சமூக நீதி, சமத்து வம் மற்றும் சுயமரியாதைக் கொள் கைகளை எடுத்துரைத்தனர். பெரியாரின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் கவியரங்கம் சிறப்பாக அமைந்தது.

இந்நிகழ்வில் கவிஞர் கி.எழில், தேசய்யா, சி.நீ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரமேஷ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். முன்பாக கழகப் பாடகர் பன்னீர் செல்வம் கழகப் பாடல்களை பாடி உற் சாகப்படுத்தினார். இதில் பெரியார் பிஞ்சு மாணவர்கள் கவிதை வாசிக்க, தமிழ் ஆர்வலர் பாசறை க.புவியரசு மற்றும் பெரியார் சிந்தனையாளர் மத்தூர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இறுதியாக மகளிரணித் தோழியர் யமுனா நன்றி கூறினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *