அடுத்த இரு வாரங்களுக்கு தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.24 தமிழ்நாடு மற்றும் கருநாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் என்ற கணக்கீட்டில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், மேலாண்மை ஆணையமும் கூடி, தண்ணீர் திறப்பு பற்றி விவாதிக்கின்றன. இந்த நிலையில் ஆணையத்தின் 60-ஆவது கூட்டம் நேற்று (23.10.2026) நடைபெற்றது. டில்லியில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதன்படி, தமிழ்நாடு, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.இந்தக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தப்படி அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வீதம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று கருநாடகாவிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *