ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவா கோஷமோ! கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடையாம்! பதவியேற்றதும் உடனடியாக ஆளுநர் அதிரடி ஆணை

- Advertisement -

திருவனந்தபுரம், அக். 24– கேரள மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் அண்மையில் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சிக்கிம் மாநில ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப் பட்டார். இந்நிலையில் நேற்று (23.10.2026) திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் கேரளத்தின் 29ஆம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவி ஏற்றார். அவருக்கு கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சவுமென் சென் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் மற்றும் கேரள அமைச்சர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆளுநருக்கு முதலமைச்சர் வி.டி.சதீசன், அமைச்சர்கள் மற்றும் பதவியேற்பு விழா வுக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரி வித்தனர்.

கேரளத்தின் புதிய ஆளுந ராக பொறுப்பேற்ற ஓம் பிரகாஷ் மாத்துர் ஆளுநர் மாளிகையில் சைவ உணவை மட்டுமே சமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம் பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி. வேணுகோபால் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பது: கேரள ஆளுநரின் இந்த செயல் கேரளத்தின் உணவு கலாச்சாரத்தையும், தனி நபர் சுதந்திரத்தையும் புரிந்துகொள்ளாத நடவடிக் கையாகும்.

ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் சைவ உணவை விரும்புவது அவரது தனிப் பட்ட விருப்பமாகும். ஆனால் அவரது தனிப்பட்ட உணவுப் பழக்கத்தை ஆளுநர் மாளிகையின் சமையலறை யிலும் கட்டாய மாக பின்பற்ற செய்வது முறையல்ல. ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களின் உணவுப் பழக்கவழக்கங்களும், சமூகப் பின்னணியும் மதிக்கப்பட வேண்டும். ஒருவர் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிக்க முடியாது. உணவுத் தேர்வு என்பது தனி நபரின் உரிமையாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *