இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு அருகில் நிலாச்சல் மலையில் அமைந்துள்ள காமாக்யா தேவி கோயில் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
51 சக்தி பீடங்களில் முதன்மை யானதாகக் கருதப்படும் இக்கோயி லின் கருவறையில் வழக்கமான சிலைக்குப் பதிலாகப் பாறையில் அமைந்துள்ள யோனி வடிவம் சக்தியின் அடையாளமாக வழிபடப்படுகிறதாம்!
சதிதேவியின் யோனிப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படும் இக்கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் தேவியின் மாதவிடாய்ச் சுழற்சியைக் குறிக்கும் வகையில் ‘அம்புபாச்சி மேளா’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மூன்று நாட்கள் கோயில் நடை மூடப்பட்டு, நான்காவது நாள் மீண்டும் திறக்கப்படும் தனித்துவமான மரபைக் கொண்டுள்ள இக்கோயில், பெண்மையின் ஆற்றலையும் இயற்கையின் படைப்புச் சுழற்சியையும் போற்றும் வழிபாட்டுத் தலமாம்!
