பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 150 விவசாயிகள் கைது!

2 Min Read
- Advertisement -

சமயபுரம், அக்.23 கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக்கோரி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல்துறை யினரால் குண்டு கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சட்டமன்றத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப் படையில், விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என் பதை வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் இணைந்து கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் தொடர் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில் இடைத்தேர்தல்கள் முடியும் வரை போராட் டம் ஒத்தி வைக்கப் பட்டது. இருப்பினும், கோரிக்கைகள் நிறை வேற்றப்படாததால் அக் டோபர் 22-ஆம் தேதி முதல் சாகும் வரை தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படும் என விவசாயச் சங்கங்கள் அறிவித்திருந்தன.

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட தால், நம்பர் ஒன் டோல் கேட், சமயபுரம் சுங்கச் சாவடி மற்றும் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப் பட்டு தீவிரக் கண்காணிப் புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

இதற்கிடையே, இருங் களூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல் லூரி அருகில் திரண்ட 150-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் தேசிய நெடுஞ் சாலையோரம் தமிழ் நாடு அரசுக்கு எதிராகக் கண்டனக் முழக்கங் களை எழுப்பினர். விவ சாயிகளுடன் நடத்தப் பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத தால், போராட முயன் றவர்களை காவல்துறை யினர் கைது செய்ய முயன்றனர்.

அப்போது ஒரு விவசாயி காவல்துறை யினரின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறியதும், அவரை காவல் துறையினர் தர தரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இதனால் விவசாயி களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் சமயபுரம் பகுதியில் உள்ள தனி யார் மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *