சென்னை, அக். 23– எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘எக்ஸ்தள’ பதிவில் கூறியிருப்பதாவது: செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும்கண்டனத்துக்குரியது.
குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும், காவல்துறையையும் கண்டித்து திமுக சார்பில் நாடா ளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம் பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையிலும் இதே போல் ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பில்லை என்ற நிலை யில்தான் தமிழ்நாடு இருக்கிறது.
முதலமைச்சர் தன் ரீல்ஸ் மோகத்தைத் தள்ளிவைத்துவிட்டு, பிள்ளையைத் தொலைத்து தவிக்கும் அந்தக் குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல்போன குழந் தையை உடனே கண்டறிய ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
