இதுதான் த.வெ.க. ஆட்சி! ஒரே நாளில் 11 படுகொலைகள்!

- Advertisement -

சென்னை, அக். 21 த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் 11 படுகொலை சம்பவங்கள் அரங்கேறி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டு, 5 நாள்களுக்குப் பிறகு அழுகிய நிலையில், நிர்வாண கோலத்தில் உடல் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கடையம் அருகே ராமசந்திரபுரத்தில் 12 பவுன் நகைக்காக ஜானகி எனும் 82 வயது மூதாட்டி கொடூரக் கொலை செய்யப்பட்டார்.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி கிராமத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த கலைச்செல்வி எனும் 63 வயது மூதாட்டி ரத்த காயங்களுடன் உடல் மீட்கப்பட்டது. மூதாட்டி அணிந்திருந்த தங்க வளையல் மற்றும் தங்க சங்கிலிகள் திருடுபோயுள்ளன. நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மஞ்சுவிரட்டுப் போட்டியில்
ஓட ஓட வெட்டிக்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் ருக்மணி என்பவர் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் மேலமங் கலத்தில் மஞ்சுவிரட்டுப் போட்டி யின்போது மதன் என்பவர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப் பட்டார். கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் குடிபோதையில் சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யத்தில் மாட்டுத் தொழுவம் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் பொன்னுக்காளை எனும் இளைஞர் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமுத்துப்பட்டியில் தெய்வானை எனும் மூதாட்டி மண்வெட்டியால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவர் அடித்துக் கொலை!

கடலூர் மாவட்டம் பண்டரக் கோட்டை வாணியம்பாளையத்தில் குணால் எனும் கல்லூரி மாணவர் கம்பால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். த.வெ.க. ஆட்சியில் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், போதையால் சீரழிந்த கல்லூரி மாணவர் குணாலை அவரது தந்தையே அடித்துக் கொலை செய்தார்..

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெண்பாக் கத்தில் மணிகண்டன் எனும் 27 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பெரியவடவாடி கிராமத்தில் நிலத்தகராறில் கதிர்வேல் எனும் விவசாயி, விறகு வெட்டும் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

த.வெ.க. ஆட்சியில் சட்டம் –- ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *