தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு!

3 Min Read
- Advertisement -

சென்னை, அக்.21- தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ள தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கும் தனி அலுவலர்களை நியமித்து உத்தர விட்டுள்ளது.

வார்டு மறு வரையறை உள்ளிட்ட பணிகள் முடிவடையாமல் இருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறது. தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதியுடன் முடி வடைந்தது. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப் பதற்காக, தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டனர். அதன்பின், தொடர்ந்து அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப் பட்டு வந்தது.

இந்நிலையில், 28 மாவட்டங் களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பதவிக்காலம் கடந்த அக்.19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த 28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில், பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்.19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக, 6 மாத காலத்துக்கு (2027 ஏப்ரல் 19 வரை) தனி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 93 கிராம ஊராட்சிகள் இதில் அடங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த வட்டாரங்களின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கான தனி அதிகாரிகளாக நியமிக்கப் படுகிறார்கள். மாவட்டங்களின் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) தனி அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் கூடுதல் இயக்குநர் அல்லது கூடுதல் ஆட்சியர் அல்லது இணை இயக்குநர் அல்லது திட்ட இயக்குநர் ஆகியோர் தனி அலுவலர்களாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த முடியாததற்கான காரணத்தையும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகளை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைத்து, நகர்ப்புற உள்ளாட்சிகளை விரிவாக்கம் செய்தல், அத்துடன், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் எல்லைகளை மறு வரையறை செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், ஊரக வளர்ச்சித்துறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்கள், 93 ஊரக உள்ளாட்சிகள் தொடர்பான இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய ஊரக உள்ளாட்சிகள் உருவாக்கம் மற்றும் எல்லை வரையறை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் உருவாக்குதல் போன்ற பணிகள் 23 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, கடந்த 2024ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கிலும், வார்டு மறு வரையறை முடிக்கப்பட்டு பட்டியலினத்தவர், பட்டியலின பழங்குடியின பெண்களுக்கான ஒதுக்கீடு போன்றவை முடிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் முடியாத வரையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *