ஆரணி, அக். 21- ஆரணியில் 18.10.2026 அன்று செய்யாறு மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் ஆரணி ஏ.அசோகன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் 148-ஆம் பிறந்தநாள் விழா ஆரணியில் எழுச்சியோடு நடத்துவதற்கான வழிமுறையில் எடுத்துரைத்தார்.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட கழகத் துணைத் தலைவர் சேத்துப்பட்டு அ.நாகராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பொன்.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் தி.காமராசு, ஆரணி இரா.வாசுதேவன், எஸ்.வெங்கட்ராமன், சுதாவாசுதேவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் க.வெங்கடேசன், செய்யாறு நகர இளைஞரணிச் செயலாளர் என்.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆர்.சிவக்குமார், தஞ்சாவூர்தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் யாழ் திலீபன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தந்தைபெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா, பட ஊர்வலம், பொதுக் கூட்டம் ஆரணியில் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.
தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் அவர்களின் பேரன்பைப் பெற்ற சுயமரியாதைச் சுடரொளி செய்யாறு பா .அருணாச்சலம் நூற்றாண்டு விழாவை நவம்பர் 6-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடி மகிழ்வதென தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகமயம்-உலகம் பெரியார் மயமாக்கிடும் அருந்தொண்டில் ஓய்வின்றி உழைத்துவரும் தமிழர் தலைவரின்94-ஆம்ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தாக்கள் சேர்த்து டிசம்பர் 2-ல் அய்யாவிடம் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
ஆரணி நகரத் தலைவராக வாசுதேவன், செயலாளராக எஸ்.வெங்கட்ராமன், நகர மகளிர் பாசறைச் செயலாளராக வா.சுதா, நகர மாணவர் கழக செயலாளராக யாழ்திலிபன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.
ஆரணி விழாவிற்கு மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன் ரூ.10,000/ வழங்குவதாக அறிவித்தார். அனைவருக்கும் காமாட்சி அசோகன் தேனீர்வழங்கினார்.
நகர மாணவர் கழகச் செயலாளர் யாழ்திலிபனின் நன்றியுரையுடன் கலந்துறவாடல் நிறைவுபெற்றது.
