கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.10.2026

- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சிஜேபி தலைவர் டிப்கே கைது; வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிஜேபி தலைவர் அபிஜீத் டிப்கே! டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, தலைவர் அபிஜீத் டிப்கே உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்; அவர்களின் இருப்பிடம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர்.

* மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை:தொகுதி மறுவரையறை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த மோடிக்கு கார்கே கடிதம்!நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய முன்மொழிவுகளை இறுதி செய்வதற்கு முன், அனைத்து கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பு திருத்த மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 27% ஓபிசி இட ஒதுக்கீடு ரத்து: மத்தியப் பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! ஓபிசி இட ஒதுக்கீட்டை 14%-லிருந்து 27%-ஆக உயர்த்திய 2019 சட்டத்தை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு (SLP) தாக்கல் செய்துள்ளது.

தி இந்து:

* தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக அக்டோபர் 23இல் டில்லி நோக்கி விவசாயிகள் பேரணி! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் விவசாயிகள் டில்லியில் பேரணி நடத்த முடிவு.

* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை! சென்னையைச் சேர்ந்த தொழில் முனைவோர் சபரீசன் வேதமூர்த்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலைஞர் மு. கருணாநிதி பெயரில் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை மற்றும் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆராய்ச்சித் திட்டத்தை நிறுவியுள்ளார்.

தி டெலிகிராப்:

* மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவர்! கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணியில், கணக்கெடுப்பாளர்களாக பணியாற்ற தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளையும் சேர்க்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.11,718 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பல் மருத்துவ முதுநிலை படிப்பில் காலியிடங்கள்: தகுதி மதிப்பெண் கணிசமாகக் குறைப்பு! எம்.டி.எஸ். (MDS) முதுநிலை பல் மருத்துவ படிப்பில் காலியிடங்கள் அதிகரித்து உள்ளதால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நீட்-எம்.டி.எஸ். (NEET-MDS) தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. 2026இல் அனைத்து பிரிவினருக்கும் தகுதி சதவீதம் 20.576 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *