ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்ட அமைப்பான சிஜேபி மாணவர் அமைப்புகளின் தலைவர் நோகா போரா உள்ளிட்டவர்கள் என புதுடில்லியில் 12.10.2026 அன்று மாலை உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி சென்றார்கள்
இந்தப் பேரணியில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டதால் லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் ராகுல் பின்னால் சென்றது. இந்த நிலையில் ராகுலிடம் அடையாளம் தெரியாத நபரும் பெண் ஊடகவியலாளரும் சென்றனர். அந்த நபர் அடிக்கடி ராகுல் பாதையில் குறுக்கிட்டுக்கொண்டே சென்றார். அவரை பல முறை ஒரு ஓரமாக நடந்துவாருங்கள் என்று ராகுல் கேட்டுக்கொண்டு இருந்த போது அவரை பெண் ஊடகவியலாலர் ராகுலின் முன்பாக தள்ளிவிட முயன்றார் அப்போது ராகுல் அந்த நபரைத் தடுத்தார் கூட்டம் ராகுலை நெருங்கவே அந்த நபர் நிலை தடுமாறி அப்பெண் மீது விழுந்தார். பெண்ணும் கீழே விழுந்துவிட்டார். இது அனைத்தும் காணொலியில் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் இரவு 10 மணிக்கு பாஜகவின் முக்கியமான தலைவர்களுள் ஒருவர் மருத்துவமனையில் இருந்து படம் ஒன்றும் அத்தோடு சில பதிவும் வெளியிட்டிருந்தார்.
அதில் ராகுலின் மனிதாபிமானமற்ற நடைமுறை கர்ப்பிணிப்பெண் என்றும் பாராமல் அவரை தள்ளிவிட்டத்தில் பெண் கடுமையாக பாதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பிரபல ஊடகவியலாளர் இதுதான் ராகுலில் அமைதிவழிப் போராட்டமா இது போன்றுதான் பெண்கள் மீது அடக்குமுறையை ஏவுவீர்களா இதோ ஒரு பெண் வயிற்றில் வளரும் குழந்தையோடு பாதிப்பில் உள்ளார் என்று அந்தப்பதிவில் எழுதி இருந்தார்.
இது மிகவும் வேகமாக பரவி ராகுல் மீது பாஜகவினர் வசைபாடத்துவங்கினர்.

13ஆம் தேதி பகலில் பிரதமர் மோடி மருத்துவ மனை வந்து பெண்ணைச் சந்திக்கும் திட்டமும் அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிடமிருந்தே வாக்குமூலம் பெற்று ராகுல் உள்ளிட்ட எதிர்கட்சியின் முக்கிய் தலைவர்கள் மீது கொலை வழக்கு பதியலாம் என்று பேசப்பட்ட நிலையில் அப்பெண் இருக்கும் மருத்துவமனையில் தலைவர் வெளியிட்ட அறிக்கை பாஜகவின் வேடத்தை கலைத்துவிட்டது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊடகவியலாளர் ரிச்சா பராரசார் நேற்று இரவும் மருத்துவமனைக்கு வந்தார். தனக்கு கடுமையான வயிற்று வலி என்றும், கூட்டத்தில் ராகுல் உள்ளிட்ட சிலர் தள்ளிவிட்டார்கள். தான் 3 மாதம் கர்ப்பிணி” என்று கூறினார். உடனடியாக நாங்கள் அவரை சோதனை செய்தோம் உடலில் வெளிப்புறத்தில் எந்த காயமும் இல்லை, கீழே விழுந்ததற்கான அடையாளமும் இல்லை.
உடனடியாக மகப்பேறு மருத்துவ வல்லுநரை அழைத்து நவீன கருவிகள் கொண்டு சோதனை நடத்தினோம் வயிற்றில் 16 வாரக் கருவிற்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை, அது நல்ல முறையில் உள்ளது இருப்பினும் அவர் கேட்டுக்கொண்டது இணங்க நாங்கள் உள் மருத்துவப் பயனாளியாகச் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். இவரைப் பார்க்க அவரது நலம் விரும்பிகள் அவரை சந்திக்கவந்தனர்.
முக்கிய நபர்கள் தவிர மற்றவர்களை நாங்கள் அனுமதிக்கவில்லை. மேலும் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் சிலரைத் தவிர வேறு யாரையும் நாங்கள் அவரது அறைக்கு அனுமதிக்கவில்லை.
இதனை அடுத்து 13.10.2026 காலை மீண்டும் அவரை பரிசோதனை செய்தோம் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனை அடுத்து அவரை நாங்கள் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தோம். அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று சிறீ கங்காராம் மருத்துவமனைத் தலைவர் அஜய் சுவரூப் கூறினார். இந்த நிலையில் பெண் ஊடகவியலாளரைத் தாக்கிய ராகுல் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் என்று ஏஅய் மூலம் சுவரொட்டிகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்தப் பெண்ணும் பாஜக ஆதரவு தொலைக் காட்சிகளின் நேரலையில் என்னை ராகுல் காந்தி தள்ளிவிட்டார் என்று தொடர்ச்சியாக பேட்டியளித்தார். சில தனியார் தொலைக்காட்சியில் ராகுல் தள்ளிவிட்டதற்கான அடையாளம் எதுவுமே இல்லையே என்று கூறியது, என்னை ஒரு கர்ப்பிணிப்பெண் பாதிக்கப்பட்ட நானே உண்மையைத் துணிச்சலுடன் பேசுகிறேன். ஆனால், நீங்கள் எதிர்கேள்வி கேட்கிறீர்களே என்று ஆணவத்தோடு பதில் கூறினார். ஆனால் நேரடியான சாட்சி எதையுமே அவர் காட்டவில்லை.
இந்த நிலையில், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ஊடகவியலாளர் ரிச்சா பாராசருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, உடலில் சிறிய உராய்வோ காயமோ அல்லது வீக்கம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டது. மாலை நாளிதழ்களில் வெளியாகவே பாஜக பெண்ணை வைத்து நடத்தவிருந்த நாடகம் அம்பலமானது.
