மத்திய துணை ராணுவப் படையில் பணி வாய்ப்பு

- Advertisement -

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான சிஆர்பிஎஃப்-இல் நிரப்பப்பட உள்ள 521 காவலர் மற்றும் தலைமைக் காவலர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்தியாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட இளம் ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: R-11-21/2026-Sports

பணி: Constable (General Duty (Sports Quota)-2025)

காலியிடங்கள்: 339(ஆண்கள் 258; பெண்கள் 81)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.21,700-69,100

வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

பணி: Head Constable (General Duty) (Sports Quota-2026)

காலியிடங்கள்: 182(ஆண்கள் 150; பெண்கள் 32)

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.25,500 – 81,100

வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் திறன், உடற்தகுதி, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாள், இடம் போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.விளையாட்டு சாதனைகள் 30.9.2024-30.9.2026-கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்திருக்க வேண்டும்.

உடற்தகுதிகள்: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், எஸ்டி பிரிவினர்- 162.5 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். மேலும் சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீ. அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. அகலம் இருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், (எஸ்டி பிரிவினர் 150 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். அனைவரும் உயரத்திற்கேற்ற உடல் எடையும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிலானைப் பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.rect.crpf.gov.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.11.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *