பணியில் இருப்பவர்களுக்கான எம்.பி.ஏ. படிப்பு விண்ணப்பிக்க சென்னை அய்.அய்.டி. அழைப்பு!

சென்னை, அக்.12- பணியில் இருப்பவா்களுக்கான நிா்வாக எம்பிஏ (எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ) படிப்பில் சேருவதற்கு வரும் அக். 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை அய்அய்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அய்அய்டியில் நிா்வாக எம்பிஏ படிப்பு வழங்கப்படுகிறது. இதில் சோ்க்கை பெற இளநிலை படிப்பில் ஏதாவது பாடத்திட்டத்தில் தோ்ச்சியுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிக்க வேண்டும். சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு நவ. 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் டிசம்பா் மாதம் வெளியிடப்படும். இதைத் தொடா்ந்து நிா்வாக எம்பிஏ படிப்புக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும்.

தற்போதைய தேவைகள், எதிா்காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஏற்ப வணிக மேலாண்மையை தொழில்நுட்பம், புத்தாக்கத்துடன் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தப் பாடத்திட்டம் அமைந்துள்ளது. உலகளாவிய வணிக மேலாண்மை, சைபா் பாதுகாப்பு, அதன் பயன்பாடுகள், வணிக மாதிரிகள், புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவா்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற முடியும்.

இந்தப் படிப்பில் சோ்க்கை பெற இணையதளத்தில் அக்.26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் 044- 22575558 என்ற அலுவலக எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இந்தப் பாடத்திட்டம் நேரடி மற்றும் இணையவழி கற்றலை இணைத்த வார இறுதி வகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *