காட்பாடி, அக். 11- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “சிந்திக்க! தெளிக! பகுத்தறிவு பெறுக! – கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம்” காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆர்.அய்.சி.டி கல்வி நிறுவனத்தில் 10-10-2026 அன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.
இம்முகாமிற்கு ஆர்.அய்.சி.டி கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஷ்ரப் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முனைவர் வே.விநாயகமூர்த்தி தொடக்க உரையாற்றினார். குடியாத்தம் நகர திரா விடர் கழக தலைவர் சி.சாந்தகுமார் நோக்க உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் இர. அன்பரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், முகாமின் தலைப்பையொட்டி “சிந்திக்க! தெளிக! பகுத்தறிவு பெறுக!” என்ற தலைப்பில் மாணவர்களிடையே மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் சிந்தனை, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த சிறப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட செவி லியர் துறை மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனை வருக்கும் தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?”, “பெண்கள் முன்னேற்றத் திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன?”, “பெரியார் கேட்கும் 148 கேள்விகள்” ஆகிய புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.
இறுதியாக செவிலியர் துறை ஆசிரியர் ரீட்டா வான்மலர் நன்றியுரை கூறினார்.
