காட்பாடியில் கல்லூரி மாணவர்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வு முகாம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

காட்பாடி, அக். 11- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “சிந்திக்க! தெளிக! பகுத்தறிவு பெறுக! – கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம்” காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆர்.அய்.சி.டி கல்வி நிறுவனத்தில் 10-10-2026 அன்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.

இம்முகாமிற்கு ஆர்.அய்.சி.டி கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஷ்ரப் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் முனைவர் வே.விநாயகமூர்த்தி தொடக்க உரையாற்றினார். குடியாத்தம் நகர திரா விடர் கழக  தலைவர் சி.சாந்தகுமார் நோக்க உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் இர. அன்பரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், முகாமின் தலைப்பையொட்டி “சிந்திக்க! தெளிக! பகுத்தறிவு பெறுக!” என்ற தலைப்பில் மாணவர்களிடையே மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் சிந்தனை, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சிறப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட செவி லியர் துறை மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனை வருக்கும் தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?”, “பெண்கள் முன்னேற்றத் திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன?”, “பெரியார் கேட்கும் 148 கேள்விகள்” ஆகிய புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.

இறுதியாக செவிலியர் துறை ஆசிரியர் ரீட்டா வான்மலர் நன்றியுரை கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *